/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விஷச்சாராய விவகாரம் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
விஷச்சாராய விவகாரம் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 28, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதில் சாராய விற்பனையை கண்டுகொள்ளாத அதிகாரிகள், போலீசாரை கைது செய்யக்கோரி, ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே, மா.கம்யூ., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாலுகா செயலர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். அதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடபதி பேசுகையில், 'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. கள்ளச்சாராய உயிரிழப்பு குடும்பத்தினருக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும்' என்றார். ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.