/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
/
இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
ADDED : மார் 12, 2025 08:47 AM
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே பாச்சாலியூர் விநாயகர், மாரியம்மன் கோவில்கள் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடங்களை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.முன்னதாக கோம்பைக்காட்டில் கன்றுக்குட்டியுடன் பசுமாடு, ஜல்லிக்கட்டு மாடுகள், நடனமாடும் குதிரைகளுடன் தொடங்கிய ஊர்வலம் தொப்பக்காடு வழியே கோவிலை அடைந்தது.
அதேபோல் இடைப்பாடி, கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் திருவிழாவின், 15ம் நாளான நேற்று, ஏராளமான பெண்கள், செல்லியாண்டி அம்மன் கோவில் வளாகம் முன், பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேட்டூர் தொழிலாளர் குடியிருப்பு, பெரிய பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் காவிரியாற்றில் தீர்த்தக்குடம் எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
3 ஆண்டுக்கு பின் திருவிழா
கொளத்துார், லக்கம்பட்டி ஊராட்சி பெரியதண்டா வனப்பகுதியில் உள்ள ஒசாடப்பன் கோவில் மாசி திருவிழா, 3 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். அதன்படி நேற்று காலை, 9:30 மணிக்கு, சுவாமி அழைத்தல், கிடாய் பொங்கல் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள், ஆடு பலி கொடுத்தனர். இன்று காலை, 7:00 மணி முதல் அன்னதானம் செய்யப்படும்.