/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை முதல் தி.மு.க., கூட்டம்: கட்சியினருக்கு எம்.பி., அழைப்பு
/
நாளை முதல் தி.மு.க., கூட்டம்: கட்சியினருக்கு எம்.பி., அழைப்பு
நாளை முதல் தி.மு.க., கூட்டம்: கட்சியினருக்கு எம்.பி., அழைப்பு
நாளை முதல் தி.மு.க., கூட்டம்: கட்சியினருக்கு எம்.பி., அழைப்பு
ADDED : ஆக 28, 2024 08:25 AM
சேலம்: தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி அறிக்கை: தி.மு.க.,வில், இடங்கணசாலை நகர பொது உறுப்பினர் கூட்டம், சீனிவாசா திருமண மண்டபத்தில், ஆக., 29(நாளை) காலை, 9:00 மணிக்கு நடக்க உள்ளது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, மகுடஞ்சாவடி ஒன்றிய கூட்டம், ஆர்.கே.திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. சங்ககிரி ஒன்றிய கூட்டம், மாலை, 4:00 மணிக்கு, பி.ஆர்.எம்., திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது.
வரும், 30 காலை, 9:00 மணிக்கு இடைப்பாடி ஒன்றிய கூட்டம் வரதராஜபெருமாள் திருமண மண்டபம்; 11:00 மணிக்கு கொங்கணாபுரம் ஒன்றிய கூட்டம், என்.பி.டி., மகால்; 31 மாலை, 4:00 மணிக்கு, நங்கவள்ளி ஒன்றிய கூட்டம் எம்.வி.என்., மகால்; 2 காலை, 9:00 மணிக்கு, மேச்சேரி ஒன்றிய கூட்டம் விஜய மகால்; 11:00 மணிக்கு மேட்டூர் நகர கூட்டம் கற்பகம் திருமண மண்டபம்; மாலை, 4:00 மணிக்கு கொளத்துார் ஒன்றிய கூட்டம் எஸ்.எஸ்.மகாலில் நடக்க உள்ளது.
வரும், 3 காலை, 9:00 மணிக்கு தாரமங்கலம் ஒன்றிய கூட்டம், ஜே.பி.திருமண மண்டபம்; 11:00 மணிக்கு தாரமங்கலம் நகர கூட்டம் செங்குந்தர் மண்டபம்; மாலை, 4:00 மணிக்கு, இடைப்பாடி நகர கூட்டம் நடராஜன் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. இதில் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அந்தந்த நகர, ஒன்றிய, டவுன் பஞ்சாயத்துகளில் பங்கேற்க வேண்டும்.