/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆவணங்கள் நன்கொடை காப்பாட்சியர் கோரிக்கை
/
ஆவணங்கள் நன்கொடை காப்பாட்சியர் கோரிக்கை
ADDED : மே 07, 2024 10:27 AM
சேலம்: சேலம் அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் முல்லையரசு அறிக்கை:இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்கள் தியாகம், பங்களிப்பை போற்றும்படி, சென்னை மெரினா கடற்கரையில், 'ஹூமாயூன் மஹால்' கட்டடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
இது சிறப்பாக அமைய அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. அதற்கு சேலம், நாமக்கல் மாவட்ட மக்கள், அவரவர் வசம் உள்ள சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்து பிரதி, செய்தித்தாள், ஜெயில் வில்லை, ராட்டை, பட்டயம், ஐ.என்.ஏ., சீருடை, ஐ.என்.ஏ., அஞ்சல்தலை, ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக, சேலம் அரசு அருங்காட்சியகத்தில் வழங்கலாம்.
வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகை கடிதம், பாராட்டு சான்றிதழ், அருங்காட்சியக கமிஷனர் மூலம் வழங்கப்படும். மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் பொருட்கள், வழங்கியவர்களின் பெயர்களுடன் இடம்பெறும்.