/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆதார் எண் கேட்டு அலைக்கழிக்க வேண்டாம் ஜூன் 6 முதல் பள்ளிகளில் பதிவு செய்யலாம்
/
ஆதார் எண் கேட்டு அலைக்கழிக்க வேண்டாம் ஜூன் 6 முதல் பள்ளிகளில் பதிவு செய்யலாம்
ஆதார் எண் கேட்டு அலைக்கழிக்க வேண்டாம் ஜூன் 6 முதல் பள்ளிகளில் பதிவு செய்யலாம்
ஆதார் எண் கேட்டு அலைக்கழிக்க வேண்டாம் ஜூன் 6 முதல் பள்ளிகளில் பதிவு செய்யலாம்
ADDED : மே 30, 2024 08:44 PM
சேலம்:ஆதார் எண் கேட்டு அலைக்கழிக்க வேண்டாம்; ஜூன், 6 முதல் பள்ளிகளிலேயே பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள, அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் ஆதார் எண் இல்லாமல், பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, அந்த எண்ணை பெற்றுத்தர, தனியார் பள்ளிகளில், 15 நாள் வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. இதனால் ஆதார் எண் எடுக்காத மாணவ, மாணவியரை அழைத்துக்கொண்டு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையங்களில் பெற்றோர் குவிந்து வருகின்றனர். அங்கு வரிசையில் காத்திருந்து ஆதார் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜூன், 6 முதல், அந்தந்த பள்ளிகளில் ஆதார் பதிவு செய்யப்படும் என்றும், ஆதார் எண் கேட்டு அலைக்கழிக்க வேண்டாம் என்றும், மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் அவதி
சங்ககிரியில் முன்பு தாலுகா அலுவலகம் செயல்பட்ட இடத்தில், ஆதார் மையம் செயல்படுகிறது. அங்கு ஆதாரில் திருத்தம் உள்ளிட்டவை மேற்கொள்ள, தினமும் ஏராளமானோர் வருகின்றனர். ஆனால் கூட்டம் அதிகம் இருப்பதால், 'நாளை, நாளை மறுநாள் வாருங்கள்' என அறிவுறுத்தி அனுப்பி வைப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தேவண்ணகவுண்டனுார் மணி கூறுகையில், '' ஆதார் மையத்தில் எப்போதும் கூட்டம் உள்ளது. கூடுதல் மையம் அமைக்க வேண்டும்,'' என்றார்.
சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி கூறுகையில், ''இதுகுறித்து விசாரிக்கப்படும்,'' என்றார்.