ADDED : ஜூன் 25, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: டிப்பர் லாரி மோதி, மொபட்டில் சென்ற டிரைவர் உயிரிழந்தார்.
ஓமலுார் அருகே தொளசம்பட்டியைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் குமார், 30, லாரி டிரைவர். மனைவி சண்முகப்ரியா, 23, மகன் மிதுன், 2. குமார் நேற்று மதியம், 12:30 மணிக்கு, காமலாபுரத்துக்கு ஜூபிடர் மொபட்டில் சென்று விட்டு, மீண்டும் தொளசம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.
பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.சி.செட்டிப்பட்டி அருகே வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றதால், பலத்த காயம் அடைந்த குமாரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
டிப்பர் லாரியை கைப்பற்றிய ஓமலுார் போலீசார், தப்பிச் சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.