/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிரம்பும் குட்டையால் 2 கிராமத்தினருக்கு பிரச்னை அரை அடிக்கு கரை உடைத்து தண்ணீர் வெளியேற்றம்

ADDED : ஆக 25, 2024 01:25 AM
நிரம்பும் குட்டையால் 2 கிராமத்தினருக்கு பிரச்னை
அரை அடிக்கு கரை உடைத்து தண்ணீர் வெளியேற்றம்
பெ.நா.பாளையம், ஆக. 25-
நிரம்பி வரும் குட்டையால், இரு கிராமத்தினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதால், அமைதி பேச்சு நடத்தி, பின் அரை அடிக்கு கரை உடைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் இடையப்பட்டி ஊராட்சி, நெய்யமலை அடிவார பகுதியில், 5 ஏக்கரில் குட்டை உள்ளது. 25 அடி உயரம் கொண்ட குட்டையில், தற்போது, 20 அடிக்கு தண்ணீர் உள்ளது. தாண்டானுார் கிராம மக்கள், குட்டையின் ஒரு பகுதி கரை வலுவிழந்து உடையும்படி உள்ளதால், தண்ணீர் திறக்க வலியுறுத்தினர். இடையப்பட்டி கிராம மக்கள், தண்ணீர் திறக்க மறுத்தனர்.
இதுதொடர்பாக நேற்று, பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் ஜெயக்குமார் தலைமையில் இடையப்பட்டி ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் அமைதி பேச்சு நடந்தது. அதில் தண்ணீர் நிரம்பி வெளியேறும் பகுதியில் அரை அடி உயரம் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதை இரு கிராமத்தினரும் ஏற்றனர். தொடர்ந்து நீர் நிரம்பி வெளியேறும் இடத்தில் அரை அடி உயரம், கரை உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் தாண்டானுார் ஓடையிலும் தண்ணீர் செல்வதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தாசில்தார் ஜெயக்குமார் கூறுகையில், 'ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள குட்டை பாதுகாப்பாக உள்ளதை, பொறியாளர் குழுவினர் உறுதி செய்தனர். அரை அடி உயரம் உடைத்துவிட்டதால், அங்கிருந்து தண்ணீர் வெளியேறுகிறது. வெளியேறும் அளவுக்கு, குட்டைக்கு தண்ணீரும் வருகிறது. குட்டையை தொடர்ந்து கண்காணிக்கிறோம்,'' என்றார்.