ADDED : ஆக 13, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஞ்சப்பள்ளி: பாலக்கோடு அடுத்த, சின்னேகவுண்டனஹள்ளியை சேர்ந்த விவ-சாயி ராமன், 62; இவர் பாலப்பனஹள்ளி செல்லும் வழியிலுள்ள அவரது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த, 10 அன்று அவருடைய நிலத்தில் சென்று பார்த்தபோது, ஆழ்துளை கிணற்றின் மோட்டாருக்கு போடபட்டிருந்த ஒயர்கள் திருடு போனது தெரிந்தது. புகார் படி, பஞ்சப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

