/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதியதில் இன்ஜினியர் பலி
/
டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதியதில் இன்ஜினியர் பலி
டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதியதில் இன்ஜினியர் பலி
டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதியதில் இன்ஜினியர் பலி
ADDED : ஜூலை 04, 2024 10:50 AM
குமாரபாளையம்: சேலம் மாவட்டம், மேட்டூர், கோல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நவீன்குமார், 22; பொறியியல் பட்டதாரி. குமாரபாளையம் அருகே, ரங்கனுார் பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில் பணியாற்றி வந்தார். இவருடன் பணியாற்றுபவர், நண்பர் கண்ணன், 23.இவரது தாத்தா இறந்ததால், அவரை குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடுவதற்காக, நேற்று காலை, 9:30 மணிக்கு, 'ஹீரோ ஸ்பிளண்டர்' டூவீலரில் இருவரும் சென்றனர். நவீன்குமார் டூவீலரை ஓட்டினார். கண்ணன் பின்னால் உட்கார்ந்து சென்றார்.
சேலம் - கோவை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த சரக்கு வாகனம், டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நவீன்குமார் உயிரிழந்தார். கண்ணன், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.