/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மோடிக்கு கைப்பாவையாக இருக்கிறார் இ.பி.எஸ்., சேலம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
/
மோடிக்கு கைப்பாவையாக இருக்கிறார் இ.பி.எஸ்., சேலம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
மோடிக்கு கைப்பாவையாக இருக்கிறார் இ.பி.எஸ்., சேலம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
மோடிக்கு கைப்பாவையாக இருக்கிறார் இ.பி.எஸ்., சேலம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 04, 2024 04:28 AM
சேலம்: சேலம் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி, ஓமலுார் கிழக்கு, வடக்கு ஒன்றியம், ஓமலுார் பேரூர் பகுதியில், எம்.எல்.ஏ., ராஜேந்திரனுடன், வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். கொல்லப்பட்டி, சேனைக்கவுண்டனுார், மூங்கில்பாடி, தேக்கம்பட்டி, வெள்ளாளப்பட்டி, முள்ளுசெட்டிப்பட்டி, பொட்டியபுரம் உள்பட, 30க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப்போடுமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின், மக்கள் மனதை அறிந்து பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். மாதந்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித்தொகை, 1,000 ரூபாய், நம் வீட்டு குழந்தைகள், கல்லுாரி சென்று படிக்கும்படி மாதந்தோறும், 1,000 ரூபாய், அரசு பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணிப்பது என, பல திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒன்று முதல், ௫ம் வகுப்பு வரை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டியை வழங்குகிறார். இப்படி, 13.50 லட்சம் குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
தமிழகம், மக்களுக்கு எதிராக இருக்கும் மோடிக்கு கைப்பாவையாக இருக்கிறார், இ.பி.எஸ்., கடந்த, 10 ஆண்டுகள் செய்யாதவர் என்ன செய்யப்போகிறார் என தெரியவில்லை. சிலிண்டர், பெட்ரோல், டீசல், அரிசி, தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து விட்டது. இப்படி சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ள அரசு தான் மோடியின் பா.ஜ., அதற்கு துணையாக இருப்பவர் தான் இ.பி.எஸ்., தற்போது அவருடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார். மோடி என்ன சொன்னாலும், இ.பி.எஸ்., கேட்பார். அ.தி.மு.க.,வுக்கு போடும் ஓட்டு மோடிக்கு தான் செல்லும். அதனால் மக்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும்படி உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப்போடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஓமலுார் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் வெங்கடேஷ், ஓமலுார் கிழக்கு ஒன்றிய செயலர் ரமேஷ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலர் சந்திரன், 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், மக்கள் பங்கேற்றனர்.

