/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயிர்களை சேதமாக்கும் காட்டுப் பன்றி காவிரி கரையோர விவசாயிகள் விரக்தி

ADDED : செப் 03, 2024 03:23 AM
மேட்டூர்: கொளத்துார், காவிரி கரையோரம், தெலுங்கானுார் கிராமம் உள்-ளது. இந்த கிராமத்தில் காவிரி கரையோரம் விவசாயி காந்தி தனது, 2 ஏக்கர் நிலத்தில் சோளம், வாழை, மஞ்சள், சாம்பல் பூசணி தலா ஒரு ஏக்கர் என, 5 ஏக்கரில் பயிர் சாகுபடி செய்-துள்ளார்.
அதே பகுதியில் ஆணைகவுண்டர், 2 ஏக்கரில் நிலக்கடலை, தங்கவேல், 5 ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு காட்டு பன்றிகள் மூன்று விவசாயிகள் நிலத்தில் புகுந்து சோளம், கடலை பயிர்களை சேதப்படுத்தியது.இரு நாட்களுக்கு முன்பு காவேரிபுரம் அடுத்த சத்யாநகர் செல்-வராஜ் நிலத்தில் புகுந்து சோளப்பயிர்களை சேதப்படுத்தியது. சாகுபடி செய்த பயிர்களை இரவில் காட்டு பன்றிகள் புகுந்து சேதப்படுத்துவது விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.