ADDED : ஆக 08, 2024 09:07 AM
சேலம் குகை காளியம்மன், மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. அதில் பூசாரியை தொடர்ந்து வேண்டுதல் வைத்த ஏரா-ளமான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் செவ்வாய்ப்பேட்டை கபிலர் தெருவில் உள்ள காளி-யம்மன், முனியப்பன் கோவிலில், 59ம் ஆண்டு ஆடித்திருவிழா-வையொட்டி நடந்த பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பூங்கரகம், அக்னி கரகம் நடந்தது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் உடலில் அலகு குத்தி, குகை பகுதியில் உள்ள நந்தவனத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தனர்.
சேலம், அம்மாபேட்டை பலப்பட்டரை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பொங்கல், உருளுதண்டம் நிகழ்ச்சி நடந்-தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் குழந்தைகளுடன் வரிசையில் நின்று குண்டம் இறங்கினர். இன்று கரக வேடிக்கை, மாவிளக்கு ஊர்வலம், நாளை வண்டி வேடிக்கை நடக்கிறது.
கண்ணனுார் மாரியம்மன்தாரமங்கலம், கண்ணனுார் மாரியம்மன் கோவில் திருவிழாவை-யொட்டி நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அம்மன் அழைக்கும் விழா நடந்தது. தொடர்ந்து, பூசாரி தீ மிதித்து விழாவை தொடங்-கிவைத்தார். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரை கி.மீ.,க்கு வரிசையில் காத்திருந்து தீ மிதித்தனர். சில பக்தர்கள் தீச்சட்டி, அலகு, உடம்பில் வேப்பிலை கட்டி தீ மிதித்தனர். இந்த விழா, 6 மணி நேரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்-மனுக்கு பொங்கல் வைத்து கோழி, ஆடுகளை பலியிட்டு நேர்த்-திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாலையில் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியே, கண்ணனுார் மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். இதில் விமான அலகு, கார், காளி வேடம் அணிந்தும், முதுகில் வாள்-களை குத்தி பக்தர்கள் வந்தனர். மகுடஞ்சாவடி, கன்னந்தேரி ஊராட்சி கோசாரிப்பட்டி பச்சியம்மன் கோவிலில் நேற்று பல்-வேறு வித அபிஷேகம், ஆராதனை நடந்தன. தொடர்ந்து சுவாமி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பலர், ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
'கம்பம்' நடல்ஆட்டையாம்பட்டி வேலநத்தம் செங்குந்தர் பாவடி நல அறக்கட்-டளை கட்டுப்பாட்டில் உள்ள புது மாரியம்மன் கோவில், முத்துக்-குமார சுவாமி கோவிலில் நேற்று மூலவர் அம்மனுக்கு எதிரே அர்த்த மண்டபத்தில் கோவில் பூசாரி, கம்பத்தை நட்டு சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை காட்டினார். ஏராளமான பக்-தர்கள் வழிபட்டனர். சக்தி அழைத்தல், பொங்கல், மாவிளக்கு ஊர்வலம், சத்தாபரண ஊர்வலம் ஆகிய உற்சவங்கள், வரும், 13ல் நடக்க உள்ளன. 14ல் பூவோடு எடுத்தல், அக்னி கரகம் ஊர்-வலம், கூழ் அமுது படைத்தல் உற்சவங்கள், 15ல் பொங்கல் வைத்தல், வண்டி வேடிக்கை, கம்பம் காவிரியில் சேர்த்தல் ஆகி-யவை நடக்கும். 16ல் பூந்தேர், பூங்கரகம் ஊர்வலங்கள், 17ல் மஞ்சள் நீராட்டு வசந்த விழாவுடன் ஆடித்திருவிழா நிறைவு பெறும்.