/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி மாணவியருக்கு தொந்தரவு தனியார் கல்லுாரி பஸ் சிறைபிடிப்பு
/
பள்ளி மாணவியருக்கு தொந்தரவு தனியார் கல்லுாரி பஸ் சிறைபிடிப்பு
பள்ளி மாணவியருக்கு தொந்தரவு தனியார் கல்லுாரி பஸ் சிறைபிடிப்பு
பள்ளி மாணவியருக்கு தொந்தரவு தனியார் கல்லுாரி பஸ் சிறைபிடிப்பு
ADDED : ஆக 25, 2024 01:23 AM
பள்ளி மாணவியருக்கு தொந்தரவு
தனியார் கல்லுாரி பஸ் சிறைபிடிப்பு
மகுடஞ்சாவடி, ஆக. 25-
சேலம் மாவட்டம் சித்தர்கோவில் அருகே தனியார் பள்ளி உள்ளது. அங்கு சிறப்பு வகுப்பு முடிந்து, தினமும் மாலை, 6:00 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட மாணவியர் வீடுகளுக்கு செல்வதற்கு, பள்ளி முன் பஸ்சிற்கு காத்திருப்பர்.
அப்போது அந்த வழியே, திருச்செங்கோடு தனியார் கல்லுாரி பஸ்சில் செல்லும் மாணவர்கள், வேகத்தடை அருகே பஸ் மெதுவாக செல்லும்போது, மாணவி களிடம் தேவையற்ற முறையில் கூச்சலிட்டு வந்தனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர், கல்லுாரி நிர்வாகத்தினரிடம் எச்சரித்தும் பலனில்லை.
இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணிக்கு, வழக்கம்போல் மாணவர்கள் கூச்சலிட்டு கத்தினர். இதனால் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், இருசக்கர வாகனங்களில் விரட்டிச்சென்று, சித்தர்கோவில் பஸ் ஸ்டாப்பில், அந்த கல்லுாரி பஸ்சை வழிமறித்து சிறைபிடித்தனர். தொடர்ந்து டிரைவர் இறங்கினார்.
அவரிடம், பள்ளி நிர்வாகிகள் எச்சரித்தனர். உடனே கல்லுாரி நிர்வாகத்திடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'இனியும் மாணவர்கள் கூச்சலிட்டால் போலீசில் புகார் அளிப்போம்' என எச்சரித்தனர். அரை மணி நேரத்துக்கு பின், பஸ் விடுவிக்கப்பட்டது.

