/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்க வீட்டு வசதி சங்கம் கோரிக்கை
/
ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்க வீட்டு வசதி சங்கம் கோரிக்கை
ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்க வீட்டு வசதி சங்கம் கோரிக்கை
ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்க வீட்டு வசதி சங்கம் கோரிக்கை
ADDED : மே 02, 2024 11:53 AM
சேலம்: தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர் அசோசியேசன் சார்பில், சேலம், திருவள்ளுவர் சிலை அருகே மே தின ஊர்வலம் நேற்று நடந்தது. அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன செயலர் சுப்ரமணியம் தொடங்கி வைத்தார். அங்கிருந்து, கோட்டை மைதானத்தில் உள்ள மாநகராட்சி பல்நோக்கு அரங்கு வரை ஊர்வலம் சென்றது.
தொடர்ந்து அங்கு நடந்த மாநில மாநாட்டில், மாநிலம் முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான, வீட்டு வசதி சங்க சொத்துகளை மீட்டெடுக்க வேண்டும்; மீட்கப்பட்ட சங்க சொத்துகளை விற்று நிலுவை சம்பளம் வழங்கி பணியாளர்களின் துயர்துடைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொருளாளர் மோகன்குமார், பொதுச்செயலர் முருகேசன், சேலம் பொருளாளர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொழிற்சங்கங்கள்
அதேபோல் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம், அம்பேத்கர் சிலை முன் மே தின பேரணி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் கோவிந்தன் தலைமையில் தொடங்கி கோட்டை மைதானத்தில் முடிந்தது. இதில் சி.ஐ.டி.யு., மாநில செயலர் ராஜேந்திரன் உள்ளிட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

