/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் நீர்வரத்து அதிகரிப்பு நீர்மட்டம் மீண்டும் உயர்வு
/
மேட்டூர் நீர்வரத்து அதிகரிப்பு நீர்மட்டம் மீண்டும் உயர்வு
மேட்டூர் நீர்வரத்து அதிகரிப்பு நீர்மட்டம் மீண்டும் உயர்வு
மேட்டூர் நீர்வரத்து அதிகரிப்பு நீர்மட்டம் மீண்டும் உயர்வு
ADDED : செப் 03, 2024 03:22 AM
மேட்டூர்: நீர்வரத்து அதிகரிப்பால், நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 1 அடி, நீர் இருப்பு, 1 டி.எம்.சி., உயர்ந்தது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பி-டிப்பு பகுதியில் மழை அதிகரித்ததால் கடந்த, 31ல், 115.56 அடி-யாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்க துவங்கியது. கடந்த, 31ல், வினாடிக்கு, 6,396 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று முன்தினம், 19,199 கனஅடியாகவும், நேற்று, 22,601 கனஅடியாகவும் அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு, 13,500 கனஅடி நீர் திறக்கப்-பட்டது.நீர் திறப்பை விட, வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று முன்-தினம், 115.82 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 116.27 அடியாகவும், 86.95 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 87.64 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது.
கடந்த ஒரு நாளில் அணை நீர்மட்டம் 1 அடி, நீர் இருப்பு, 1 டி.எம்.சி., அதிகரித்துள்ளது. நேற்று கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு, 15,600 கன-அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது. இதனால் வரும் நாட்களில், மேட்டூர் அணை நீர்வரத்து மீண்டும் குறைய வாய்ப்புள்ளது.