/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கபினி, கே.ஆர்.எஸ்., நீர் திறப்பு குறைப்பு
/
கபினி, கே.ஆர்.எஸ்., நீர் திறப்பு குறைப்பு
ADDED : ஆக 07, 2024 02:03 AM
மேட்டூர்:கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் உபரிநீர் தொடர்ச்சியாக வந்ததால், மேட்டூர் அணை கடந்த, 30ல் நிரம்பியது.
இதனால் உபரிநீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. இரு நாட்களாக கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம் வினாடிக்கு, 34,029 கன அடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்வரத்து நேற்று, 16,400 கன அடியாக சரிந்தது. அதேபோல், 12,225 கன அடியாக இருந்த கபினி நீர்வரத்து, 6,547 கன அடியாக சரிந்தது. இதனால் நேற்று முன்தினம், 40,615 கன அடியாக இருந்த இரு அணைகளின் நீர்திறப்பு, நேற்று, 9,960 கன அடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனம் தவிர்த்து காவிரியில் வினாடிக்கு, 7,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் இன்று முதல், வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்வரத்து குறையும். அதற்கேற்ப, 16 கண் மதகில் திறக்கப்படும் உபரிநீரை நிறுத்த வாய்ப்புள்ளது.