/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லட்சுமி நாராயண கோவிலில் வரும் 12ல் கும்பாபிஷேகம்
/
லட்சுமி நாராயண கோவிலில் வரும் 12ல் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 03, 2024 11:15 AM
சேலம்: சேலம், 2வது அக்ரஹாரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான லட்சுமி நாராயண சுவாமி கோவில் புனரமைக்கப்பட்டு வரும், 12ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, 10 காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரை ஆச்சார்ய அழைப்பு, சங்கல்பம், வாஸ்துசாந்தி, யாகசாலை அலங்காரம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை நடக்க உள்ளது. மாலை, 5:00 மணிக்கு பஞ்சகாவ்யம் உள்ளிட்டவை இரவு, 10:00 மணிவரை நடக்க உள்ளது.
மறுநாள் காலை, 8:00 மணிக்கு நித்ய ஹோமம், கும்ப ஸ்தாபனங்கள் செய்தல், மாலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, சதுர்வேத பாராயணம், பிரபந்த சேவை, மூர்த்தி ஹோமம் தாலாட்டு சேவை நடக்க உள்ளது. 12 காலை, 5:00 மணி முதல், திருப்பள்ளி எழுச்சி, யாகசாலையில் ஹோமம் பூர்த்தி செய்தல், மகா தீபாராதனை, 8:30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நிகழ்ச்சியை தொடர்ந்து, 10:00 மணிக்குள் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.