/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செல்லாண்டியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
செல்லாண்டியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : செப் 05, 2024 02:52 AM
சங்ககிரி: சங்ககிரி, சந்தைப்பேட்டை செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, கடந்த மாதம் 23ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
நேற்று முன்தினம் கிராம சாந்தி நடந்தது. நேற்று, பவானி கூடுதுறைக்கு சென்ற பக்தர்கள், காவிரியாற்றில் இருந்து புனித நீர் எடுத்துக்கொண்டு வி.என்.பாளையம் நல்ல கிணறு பகுதிக்கு வந்தனர்.அங்கிருந்து தீர்த்தக்
குடங்களை தலையில் சுமந்தபடி, ஊர்வலமாக புறப்பட்ட பக்தர்கள், பவானி சாலை, புது இடைப்பாடி வழியே கோவிலை அடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன் கும்பாபிஷேக விழா நாளை காலை, 7:45 முதல், 8:45 மணிக்குள் நடக்க உள்ளது.
நாளை தீர்த்தக்குட ஊர்வலம்
இடங்கணசாலை நகராட்சி கொசவப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த, 28ல் முகூர்த்தக்கால் நடப்பட்டு கங்கணம் கட்டுதல் நடந்தது. நாளை அதிகாலை, 4:00 மணிக்கு மேல் கணபதி, சுதர்ஸன, மஹா லஷ்மி ஹோமங்கள் நடக்க உள்ளன. தொடர்ந்து, 6:00 மணிக்கு தீர்த்தக்குட ஊர்வலம் நடக்க உள்ளது. வரும், 8 காலை, 7:00 முதல் மேல், 8:00 மணிக்குள், மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
இன்று முகூர்த்தக்கால்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகே உள்ள பழமையான வரதராஜ பெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு வரும், 16ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கு அக்கோவில் முன், இன்று காலை, 7:30 முதல், 8:30 மணிக்குள் யாகசாலை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது.