/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை தொடக்கம்
/
நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை தொடக்கம்
ADDED : ஆக 28, 2024 08:25 AM
சேலம்: நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவையை, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள கால்நடை வளர்ப்பு விவசாயிகள், மக்கள் பயன்பெற, கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்த, சென்னையில், 200 நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவையை தொடங்கி வைத்தார். இதில் சேலம் மாவட்டத்துக்கு, 12 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இச்சேவை, மாவட்டத்தில் தொலைதுார கிராமங்கள், கால்நடை மருந்தகம் இல்லாத பகுதிகளுக்கு, அந்தந்த இடத்திலேயே வழங்க, அப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பசு, எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், ஆடு, கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஆய்வு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.
இந்த வாகனம், காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை குறிப்பிட்ட தடங்களில் சென்று கால்நடைகளுக்கு தேவையான சேவை வழங்கவும், மதியம், 3:00 முதல், 5:00 மணி வரை, 1962 என்ற எண்ணில் அழைத்தால், அவசர அழைப்புகளை ஏற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், தி.மு.க.,வை சேர்ந்த, எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், பா.ம.க.,வை சேர்ந்த, எம்.எல்.ஏ., அருள், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணைய இயக்குனர் பாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.