/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலமலை அடிவாரத்தில் சிறுத்தை 'உலா'
/
பாலமலை அடிவாரத்தில் சிறுத்தை 'உலா'
ADDED : ஆக 29, 2024 02:53 AM
மேட்டூர்:சேலம் மாவட்டம் கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி, பாலமலை அடிவாரத்தில் உள்ள கோம்பைக்காடு பகுதியைச் சேர்ந்தவர், பழனிசாமி, 55. இவரது தங்கை உத்தரமணியின் வீடு, இப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உள்ளது. இவரது தாய் கருப்பாயி, 64, செம்மறி ஆடுகளை வளர்க்கிறார்.
ஆக.26ல் ஆடுகள், உத்தரமணி தோட்டத்தில் மேய்ந்தன. அன்று இரவு, அப்பகுதியில் உலா வந்த சிறுத்தை, ஒரு ஆட்டை கொன்று தின்ற நிலையில், இரு ஆடுகளை கடித்து போட்டன.
அதே நாள் இரவு, 7:00 மணிக்கு கோம்பைக்காட்டில் பைக்கில் சென்ற பழனிசாமி, சிறுத்தை சாலையை கடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
நேற்று ஊராட்சி தலைவர் அந்தோணிசாமி தலைமையில் விவசாயிகள், சிறுத்தையை பிடிக்கக்கோரி, மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணியிடம் மனு கொடுத்தனர்.
அவரது உத்தரவுப்படி, மேட்டூர் வி.ஏ.ஓ., விஜயகுமார் உள்ளிட்ட வருவாய் ஊழியர்கள், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
விஜயகுமார் கூறுகையில், ''ஆடுகளை கடித்தது எந்த விலங்கு என இதுவரை வனத்துறை உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து மேட்டூர் வனச்சரகர் சிவானந்தத்திடம் பேசியுள்ளேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்,'' என்றார்.
இருப்பினும் மேட்டூர் வனத்துறை சார்பில், 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.