/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'3 மாதத்தில் ரூ.24,156 கோடி கடன்பல்வேறு திட்டங்களுக்கு வழங்கல்'
/
'3 மாதத்தில் ரூ.24,156 கோடி கடன்பல்வேறு திட்டங்களுக்கு வழங்கல்'
'3 மாதத்தில் ரூ.24,156 கோடி கடன்பல்வேறு திட்டங்களுக்கு வழங்கல்'
'3 மாதத்தில் ரூ.24,156 கோடி கடன்பல்வேறு திட்டங்களுக்கு வழங்கல்'
ADDED : மார் 01, 2025 01:42 AM
'3 மாதத்தில் ரூ.24,156 கோடி கடன்பல்வேறு திட்டங்களுக்கு வழங்கல்'
சேலம்:சேலம் மாவட்ட அளவில் வங்கிகளின், 4ம் காலாண்டு ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சேலம்
எம்.பி., செல்வகணபதி முன்னிலை வகித்தார். கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:மாவட்டத்தில் பொதுத்துறை வங்கி கிளை - 232, தனியார் வங்கி - 192, தமிழ்நாடு கிராம வங்கி, மாவட்ட கூட்டுறவு உள்பட அர
சு சார்ந்த வங்கி - 117 என, 541 வங்கிகள் செயல்படுகின்றன. இதன்மூலம் வேளாண், கல்வி கடன், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, டிசம்பர் முதல், 3 மாதங்களில், 24,156 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், கல்வி கடன் உள்பட பல்வேறு செயல்பாடுகள், வங்கிகள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. ஆர்வமுடன் தொழில் தொடங்க வருவோர், கல்வி கடன் கேட்டு வரும் மாணவ, மாணவியர் உள்ளிட்டோருக்கு, கடன் வழங்க தேவையான நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் சரவணன், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.