/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜி.ஹெச்.,ல் முறைகேடு? இணை இயக்குனர் விசாரணை
/
ஜி.ஹெச்.,ல் முறைகேடு? இணை இயக்குனர் விசாரணை
ADDED : ஜூலை 06, 2024 06:48 AM
ஓமலுார் : சேலம் மாவட்டம் ஓமலுாரில் உள்ள அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அலுவலராக ெஹலன்குமார் உள்ளார். அங்கு ஏற்கனவே முதன்மை மருத்துவ அலுவலராக பணியாற்-றிய நாகபுஷ்பராணி, தற்போது ஊட்டியில் இணை இயக்குனராக உள்ளார். அவர் ஓமலுார் மருத்துவமனையில் பணியாற்றிய-போது, பல்வேறு முறைகேடு புகார் எழுந்தது. இதுதொடர்பாக பல கட்ட விசாரணை நடந்து வருகிறது.
அதில் ஒரே நாளில் அதிகளவில் டீசல் வாங்கியது, முத்துநாயக்-கன்பட்டியில் பாம்பு கடித்து பெண் இறந்தது உள்ளிட்ட புகார்கள் குறித்து, கோவை மருத்துவ துறை இணை இயக்குனர் ராஜசே-கரன் நேற்று ஓமலுார் மருத்துவமனையில் விசாரித்தார். காலை, 10:00 முதல், இரவு, 7:30 மணி வரை, 3 செவிலியர், அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடந்தது.