ADDED : பிப் 24, 2025 03:55 AM
அ நிறம் | அளவு
மகுடஞ்சாவடி,: இளம்பிள்ளை அருகே நேற்று, மகுடஞ்சாவடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, டி.வி.எஸ்., மொபட்டை ஓட்டி வந்தவரை நிறுத்தி விசாரித்ததில், தாரமங்கலம் அருகே அதியமான் சின்னதம்பி தெருவை சேர்ந்த மாரியப்பன், 58, என்-பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு வண்டி என்றும் தெரிந்தது. தொடர்ந்து விசாரித்ததில், இளம்பிள்ளை, இடைப்பாடி, சேலம் பகுதிகளில் கைவரிசை காட்டி, பைக், மொபட் என, 20க்கும் மேற்பட்ட வாகனங்களை திருடியது தெரிந்தது. அவர் தகவல்-படி, அந்த வாகனங்களை, போலீசார் மீட்டனர். பின் மாரியப்-பனை கைது செய்தனர்.
