/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்வே ஸ்டேஷன் முன் 'பஸ் ஸ்டாப்' நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
/
ரயில்வே ஸ்டேஷன் முன் 'பஸ் ஸ்டாப்' நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
ரயில்வே ஸ்டேஷன் முன் 'பஸ் ஸ்டாப்' நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
ரயில்வே ஸ்டேஷன் முன் 'பஸ் ஸ்டாப்' நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 17, 2024 01:26 AM
சேலம்: ரயில்வே ஸ்டேஷன் முன் பஸ்களை நிறுத்தி பயணியரை ஏற்றி இறக்குவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன், 'அம்ரித் பாரத் ஸ்டேஷன்' திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி
யால் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டு வந்த, அரசு, தனியார் பஸ்கள், தற்போது அதன் நுழைவாயில் முன் உள்ள ஜங்ஷன் பிரதான சாலையில், பயணியரை இறக்கி, ஏற்றிச்செல்கின்றன. அங்கு ஒரு நிமிடம் பஸ் நிறுத்தப்பட்டால் கூட, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில், 2 அல்லது அதற்கு மேற்பட்ட பஸ்கள் ஒரே நேரத்தில் வந்து பிரதான சாலையில் நிற்பதால், போக்குவரத்து நெரிசல் நேரம் அதிகரிக்கிறது. குறிப்பாக காலை, மாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். மேலும் ஒரு நாளைக்கு, 100க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்படுவதால் ஒவ்வொரு முறையும் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டி கள் அவஸ்தை தொடர்ந்து வருகிறது. இதனால் ரயில்வே ஸ்டேஷன் முன் பஸ்களை நிறுத்தாமல், ஸ்டாப்பை இடமாற்ற நடவடிக்கை எடுக்கலாம்.
இல்லையெனில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.