/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவியர் வளையப்பந்து போட்டி நெய்க்காரப்பட்டி அரசு பள்ளி அசத்தல்
/
மாணவியர் வளையப்பந்து போட்டி நெய்க்காரப்பட்டி அரசு பள்ளி அசத்தல்
மாணவியர் வளையப்பந்து போட்டி நெய்க்காரப்பட்டி அரசு பள்ளி அசத்தல்
மாணவியர் வளையப்பந்து போட்டி நெய்க்காரப்பட்டி அரசு பள்ளி அசத்தல்
ADDED : ஆக 21, 2024 01:41 AM
வீரபாண்டி, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி குறு மைய அளவில் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இதில் நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று, மாணவியருக்கு, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர், இரட்டையர் வளையப்பந்து போட்டிகள் நடந்தன.
அதில் பனரமத்துப்பட்டி, மல்லுார், நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகள், இளம்பிள்ளை அரசு மகளிர் மேல்நிலை, பனமரத்துப்பட்டி அரசு மாதிரி என, 5 அணிகள் மோதின. 14 வயதுக்குட்ட ஒற்றையர், இரட்டையரில் பனமரத்துப்பட்டி அரசு மாதிரிப்பள்ளி முதலிடம் பிடித்தது. நெய்க்காரப்பட்டி, 2ம் இடம் பிடித்தது.
அதேபோல், 17 வயது பிரிவில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் நெய்க்காரப்பட்டி முதலிடம், மல்லுார், 2ம் இடம் பிடித்தது. 19 வயதில், இரு பிரிவுகளிலும் நெய்க்காரப்பட்டி முதலிடம், மல்லுார், 2ம் இடம் பிடித்தன.
நேற்று முன்தினம் மாணவர் வளையப்பந்து போட்டியில், 14, 17, 19 வயது பிரிவுகளில், ஒற்றையர், இரட்டையரில் அனைத்து போட்டிகளிலும் நெய்க்காரப்பட்டி அணி முதலிடம் பிடித்திருந்தது.