/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3,000 ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை
/
3,000 ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை
3,000 ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை
3,000 ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை
ADDED : ஆக 30, 2024 04:43 AM
சேலம்: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபு-ரியும் ஆசிரியர் பணியிடங்களில், மத்திய அரசு திட்ட நிதியில் நியமிக்கப்பட்டது,
உபரி ஆசிரியர்களை ஒருங்கிணைத்தது என பல பணியிடங்க-ளுக்கு தற்காலிக சம்பள கொடுப்பாணை வழங்கப்பட்டு வருகி-றது. உபரி ஆசிரியர்களை ஒருங்கிணைத்த வகையில், 3,000 பட்-டதாரி ஆசிரியர்களுக்கு சம்பள கொடுப்பாணை, ஜூலையுடன் முடிந்தது. ஆகஸ்ட் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் முதல், 6 மாதங்களுக்கு ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'தற்காலிக கொடுப்பாணைகளில் ஊதியம் பெறு-வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நிரந்தர கொடுப்பாணைக-ளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.