/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று கடலுார் கைதியிடம் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
/
இன்று கடலுார் கைதியிடம் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
இன்று கடலுார் கைதியிடம் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
இன்று கடலுார் கைதியிடம் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
ADDED : மார் 07, 2025 07:47 AM
தலைவாசல் : தலைவாசல், மும்முடி, பெரியேரி, வீரகனுார் சாலை உள்பட, 5 இடங்களில், கடந்த ஜன., 3, 4ல் திருட்டு சம்பவம் நடந்தது. அதேபோல் மல்லியக்கரை, கோபாலபுரத்தில், ஜன., 18ல், இரு கடைகளில் திருட்டு நடந்தது. வாழப்பாடி, சிங்கிபுரம் பகுதியில், 4 கடைகளில் திருட்டு சம்பவம் நடந்தது. இதுகுறித்து தலைவாசல், மல்லியக்கரை, வாழப்பாடி போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி, எஸ்.மலையனுாரை சேர்ந்த ஆறுமுகம், 38, என்பவர், ரிஷிவந்தியத்தில் நடந்த திருட்டு வழக்கில் கைதாகி, கடலுார் சிறையில் இருப்பதும், அவர், தலைவாசல், மல்லியக்கரை, வாழப்பாடியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர் மீது, 15 திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிந்தது. இதனால் ஆறுமுகத்திடம் விசாரிக்க, அவரை அழைத்து வந்து, ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் மனு அளித்தனர். விசாரித்த, மாஜிஸ்திரேட் முனுசாமி, இன்று ஒரு நாள் அனுமதி வழங்கினார். இதனால் திருட்டு வழக்கு தொடர்பாக, தலைவாசல், மல்லியக்கரை போலீசார் இன்று அவரிடம் விசாரிக்கின்றனர்.