/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பா.ஜ., மாவட்ட தலைவரை பதவி நீக்கக்கோரி போஸ்டர்
/
பா.ஜ., மாவட்ட தலைவரை பதவி நீக்கக்கோரி போஸ்டர்
ADDED : மே 02, 2024 11:52 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் சண்முகநாதன். பா.ஜ.,வின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இவருக்கு எதிராக, ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட், அண்ணா தெரு, உடையார்பாளையம் உள்பட, 7 இடங்களில், போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.ஒரு போஸ்டரில், 'பா.ஜ., கூட்டணி கட்சிக்கு உழைக்காமல் எதிர்கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்த, நம் கட்சி நிர்வாகிகளை மாற்றுக்கட்சிக்கு ஓட வைத்த, சேலம் கிழ க்கு மாவட்ட தலைவர் சண்முகநாதனை பதவியை விட்டு நீக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு போஸ்டரில், 'பா.ஜ.,வின் பணத்தை கொள்ளையடித்த மாவட்ட தலைவர் சண்முகநாதனை பதவியை விட்டு நீக்கு' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சண்முகநாதன் கூறுகையில், 'அவதுாறாக குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆத்துார் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளோம்.
'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்து, பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டியிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், பா.ஜ., வளர்ச்சி பிடிக்காமல் எதிர் கட்சியினர் போஸ்டர் ஒட்டினரா என்ற சந்தேகம் உள்ளது. மேலும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ள அனைத்து தகவலும் பொய்,'' என்றார்.

