ADDED : ஏப் 19, 2024 02:21 AM
சேலம்:சேலம்
தெற்கு தொகுதிக்குட்பட்ட நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளி, அம்மாபேட்டை சேலம் மாநகராட்சி ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில், சிவப்பு கம்பள விரிப்புடன், மாதிரி
ஓட்டுப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று ஆய்வு செய்த
பின், உதவி தேர்தல் அலுவலர் பாலச்சந்தர் கூறியதாவது:
சேலம் தெற்கு
தொகுதியில், 2 மாதிரி ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள விரிப்பு, நிழற்பந்தல், அமர்வதற்கு
நாற்காலிகள், மின்விசிறி, குடிநீர் வசதி, பாலுாட்டும்
தாய்மார்களுக்கு தனி அறை, உதவி மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
நுழைவாயில், பலுான் தோரணங்களாலும், பூச்செடிகளாலும்
அலங்கரிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற ஓட்டுச்சாவடி
மையங்கள் அமைக்க, இது ஒரு முன்னோட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

