/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீர்த்தக்குடத்துக்கு பூஜை இன்று கும்பாபிேஷகம்
/
தீர்த்தக்குடத்துக்கு பூஜை இன்று கும்பாபிேஷகம்
ADDED : ஆக 19, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடங்கணசாலை: இடங்கணசாலை நகராட்சி கே.கே.நகர் வடக்கில் உள்ள வாசுதேவ பெருமாள் கோவில் கும்பாபி-ஷேகத்தை முன்னிட்டு கடந்த, 9ல் முகூர்த்தகால் நடுதல், கங்கணம் கட்டுதல் நடந்தது.
நேற்று காலை, கஞ்சமலை சித்தர்கோவிலுக்கு சென்ற பக்தர்கள், கிணற்றில் நீராடி வழிபட்டனர். பின் அவர்கள் கொண்டு சென்ற குடங்களில் புனித தீர்த்தத்தை நிரப்பி சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களை சூடினர். சித்தர்கோவில் சிவாச்சாரியார், தீர்த்த குடத்துக்கு பூஜை செய்தார்.
பின் பக்தர்கள், குடங்களை தலையில் சுமந்தபடி, ஊர்வலமாக நடந்து சென்று கோவிலை அடைந்-தனர். இன்று காலை, 7:00 முதல், 7:25 மணிக்குள் வாசு-தேவ பெருமாளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.