/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழையால் பனிமூட்டம் வாகன ஓட்டிகள் திணறல்
/
மழையால் பனிமூட்டம் வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஆக 30, 2024 04:45 AM
வாழப்பாடி: வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மதியம், 3:30 மணிக்கு கரு-மேகம் சூழ்ந்து, வாழப்பாடி, காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, முத்-தம்பட்டி, சிங்கிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் பனிமூட்டமாக மாற, தேசிய நெடுஞ்சாலையில் சற்று துாரத்தில் சென்ற வாகனங்கள் கூட தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகன ஓட்டிகள் சென்-றனர். மேலும் மதியம், 3:30 முதல் மாலை, 5:30 மணி வரை மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர். அதேபோல் ஆத்துார், நரசிங்கபுரம், கொத்தாம்பாடி, பைத்துார், மஞ்சினி, அம்மம்பாளையம், மேட்டூர் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சேலம் அருகே பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சேலம் மாநகரின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்-தது.

