ADDED : ஏப் 21, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம்
மத்திய சிறையில் கைதிகளுக்கு வாசிப்புத்திறனை மேம்படுத்த
வள்ளுவர் வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு, சனிதோறும் கூட்டம்
நடத்தப்படுகிறது. அதன்படி, 25வது வட்ட கூட்டம் நேற்று நடந்தது.
எஸ்.பி., வினோத் தலைமை வகித்தார்.
எழுத்தாளர் பூமிபாலகன் எழுதிய, 'பசுங்கரையில் ஒரு வசந்தம்' புத்தகத்தை, கைதி சரவணன், பொருள்பட வாசித்து உரையாற்றினார்.
சேலம் வரலாற்று சங்க பொது செயலர் பர்னபாஸ், கைதிகளுக்கு திருக்குறள் புத்தகத்துடன், பிளாஸ்டிக் பக்கெட் வழங்கினார்.

