ADDED : பிப் 23, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊர்காவல் படைக்குஆட்கள் தேர்வு
சேலம் :சேலம் மாவட்ட ஊர்காவல் படைக்கு, 26 ஆண்கள், 2 பெண்கள் என, 28 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு, குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நேற்று நடந்தது.
எஸ்.பி., கவுதம் கோயல் தலைமை வகித்தார். 114 ஆண்கள், 6 பெண்கள் என, 120 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு உயரம், மார்பளவு உள்ளிட்ட உடற்தகுதி, கல்வித்தகுதி சரிபார்க்கப்பட்டது. தேர்வானவர் குறித்த தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.