/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அகவிலைப்படி உயர்வுக்கு ஓய்வு அலுவலர் சங்கம் நன்றி
/
அகவிலைப்படி உயர்வுக்கு ஓய்வு அலுவலர் சங்கம் நன்றி
ADDED : செப் 09, 2024 07:16 AM
சங்ககிரி: சங்ககிரி வட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க, 36ம் ஆண்டு விழா சங்ககிரியில் நேற்று நடந்தது. தலைவர் மணி தலைமை வகித்தார். அதில் சங்ககிரி பாரத ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் பிரபுராய் மத்தியாஸ், ஈரோடு தனியார் வங்கி ஆயுள் காப்பீடு பிரிவு மேலாளர் உதயகுமார், சங்ககிரி தனியார் வங்கி மேலாளர் ரகுவரன் ஆகியோர், 80 வயதை கடந்த மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு சால்வை அணிவித்தனர்.
தொடர்ந்து, 2024 ஜன., 1 முதல், 46ல் இருந்து, 50 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தியதற்கும், ஓய்வூதிய சங்கங்கள் மூலம் இணைய வழியில் உயிர்வாழ் சான்றிதழை புதுப்பித்துக்கொள்ளவும் அரசாணைகள் வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் புது ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல்; குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலர் கதிரேசன், பொருளாளர் வெங்கடாஜலம், இணை செயலர் மாரிசாமி, சேலம் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.