/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'3 ஆண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.2,965 கோடி கடன் உதவி வழங்கல்'
/
'3 ஆண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.2,965 கோடி கடன் உதவி வழங்கல்'
'3 ஆண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.2,965 கோடி கடன் உதவி வழங்கல்'
'3 ஆண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.2,965 கோடி கடன் உதவி வழங்கல்'
ADDED : ஆக 30, 2024 04:41 AM
சேலம்: சேலம், சின்னதிருப்பதி நகர கூட்டுறவு சங்கத்தில், 'நிறைந்தது மனம்' நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 47.30 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் உதவிகளை, கலெக்டர் பிருந்தாதேவி வழங்-கினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் கடந்த, 3 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு, 2,965 கோடி ரூபாய் கடனுதவி வழங்-கப்பட்டுள்ளது. அதேபோல், 3 ஆண்டுகளில் கூட்டுறவு நிறுவ-னங்களில் நகை கடன் பெற்ற, 1,03,986 பயனாளிகளுக்கு, 471.30 கோடி ரூபாய், 51,903 மகளிருக்கு, மகளிர் சுய உதவி குழு கடன், 132.88 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்-ளது. மேலும், 2,79,548 விவசாயிகளுக்கு, 2,223.76 கோடி ரூபாய் மதிப்பில் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.இதுபோன்று, கூட்டுறவு துறையின் பல்வேறு திட்டங்கள், மக்கள் நேரடியாக பயன்பெறும்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த நிகழ்ச்சி மூலம், 3 மகளிர் சுய உதவி குழுக்க-ளுக்கு, 39 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் உதவி உள்பட, 47.30 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பெறும் பயனாளிகள் உரிய முறையில், வாழ்வின் முன்-னேற்றத்துக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதில், தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்-திரன், எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், துணை-மேயர் சாரதாதேவி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரவிக்-குமார் உள்பட பலர் பங்கேற்றனர்