/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில்களில் சமபந்தி விருந்து கலெக்டர், மேயர் பங்கேற்பு
/
கோவில்களில் சமபந்தி விருந்து கலெக்டர், மேயர் பங்கேற்பு
கோவில்களில் சமபந்தி விருந்து கலெக்டர், மேயர் பங்கேற்பு
கோவில்களில் சமபந்தி விருந்து கலெக்டர், மேயர் பங்கேற்பு
ADDED : ஆக 16, 2024 01:14 AM
சேலம், சுதந்திர தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் சமபந்தி விருந்து நேற்று நடந்தது. சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நடந்த விருந்தில் மேயர் ராமச்சந்திரன், மக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
அதேபோல் கோட்டை மாரியம்மன், சுகவனேஸ்வரர் கோவில்களில் சமபந்தி விருந்து நடந்தது. இதில் அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராஜா உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், கலெக்டர் பிருந்தாதேவி சாப்பிட்டார். முன்னதாக அருவக்கு, பூசாரிகள் பூரண கும்ப மரியாதை வழங்கினர். தொடர்ந்து சுவாமியை தரிசித்தார். ஓமலுார் தாசில்தார் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவர் குணசேகரன், கோவில் செயல் அலுவலர் புனிதராஜ், வருவாய்த்துறையினர், மக்கள் பங்கேற்றனர்.