/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீவட்டிப்பட்டி கலவரம் எதிரொலி 2ம் நாளும் கடைகள் அடைப்பு
/
தீவட்டிப்பட்டி கலவரம் எதிரொலி 2ம் நாளும் கடைகள் அடைப்பு
தீவட்டிப்பட்டி கலவரம் எதிரொலி 2ம் நாளும் கடைகள் அடைப்பு
தீவட்டிப்பட்டி கலவரம் எதிரொலி 2ம் நாளும் கடைகள் அடைப்பு
ADDED : மே 03, 2024 09:33 PM
ஓமலுார்:சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில் ஒரு பிரிவினர் வழிபட கோரிக்கை விடுத்தனர். அதற்கு, அந்த ஊரின் மற்ற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக பதற்றம் உருவாக, தீவட்டிப்பட்டி போலீசார், கோவிலை பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். கலவரத்தின் போது, தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே பெட்ரோல் குண்டு வீசியதில் பழம் மற்றும் நகை கடைகள் கருகின.
இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்று, அப்பகுதியில் பதற்றம் நிலவியது. சில கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தீயணைப்பு வாகனம், போலீஸ் வாகனங்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தன. காலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், தீவட்டிப்பட்டி, கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.