ADDED : செப் 06, 2026 03:57 AM
அ நிறம் | அளவு
சேலம்:சுதந்திர
போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம்பிள்ளை, 155வது பிறந்தநாள் விழாவை
ஒட்டி, சேலம், பிரபாத்தில் உள்ள, அவரது சிலைக்கு, சேலம் மாவட்ட வ.உ.சி.,
பேரவை சார்பில் நிர்வாகி மனோகரன், தமிழக விவசாயிகள் சங்க மாநில
பொதுச்செயலர் பழனிமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல் கிச்சிப்பாளையம் எம்.ஜி.ஆர்.,
மருத்துவமனை அருகே உள்ள, வ.உ.சி., சிலைக்கு, தி.மு.க., சார்பில், மாநகர்
செயலர் ரகுபதி மாலை அணிவித்தார். மாவட்ட இலக்கிய அணி தலைவர் சண்முகம்,
மாநகர் துணைச்செயலர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
