/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போராடிய மாணவர்கள் 5 நாட்களுக்கு பின் பள்ளிக்கு வர அறிவுரை
/
போராடிய மாணவர்கள் 5 நாட்களுக்கு பின் பள்ளிக்கு வர அறிவுரை
போராடிய மாணவர்கள் 5 நாட்களுக்கு பின் பள்ளிக்கு வர அறிவுரை
போராடிய மாணவர்கள் 5 நாட்களுக்கு பின் பள்ளிக்கு வர அறிவுரை
ADDED : ஜூலை 04, 2024 10:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லுார்: மல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், முடி திருத்தம் செய்து வரும்படி தெரிவித்த ஆசிரியர்களுக்கு எதிராக நேற்று முன்தினம் சில மாணவர்கள் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று மாணவர்கள், அவர்களது பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். அப்போது அவரவர் நடத்தை குறித்து ஆசிரியர்கள் விளக்கினர். இதையடுத்து, 5 வேலை நாட்களுக்கு பின், வரும், 10ல் மாணவர்கள் வகுப்பறையில் அனுமதிக்கப்படுவர். அதுவரை பெற்றோர் கண்காணிப்பில் மாணவர்கள் இருக்க வேண்டும். முடிதிருத்தம் செய்து, சரியான முறையில் சீருடை அணிந்து பள்ளிக்கு வர, ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.