/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காடு படகு இல்லத்தில் நீருக்குள் மூழ்கிய படகுகள்.
/
ஏற்காடு படகு இல்லத்தில் நீருக்குள் மூழ்கிய படகுகள்.
ஏற்காடு படகு இல்லத்தில் நீருக்குள் மூழ்கிய படகுகள்.
ஏற்காடு படகு இல்லத்தில் நீருக்குள் மூழ்கிய படகுகள்.
ADDED : ஆக 09, 2024 06:24 PM
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் படகுகளும் செயல்பட்டு வருகிறது.
இந்தப் படகு இல்லத்தில் துடுப்பு படகு மோட்டார் படகு மற்றும் சுற்றுலா பயணிகள் தாங்களாகவே ஓட்டி செல்லும் இருவர் மற்றும் நான்கு பேர் செல்லக்கூடிய பெடல் படகுகள் இயக்க பட்டு வருகிறது.இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பலத்த மழையால் ஏற்காடு படகு இல்ல எரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏறி நிரம்பி வருகிறது. இந்த கன மழையால் படகு இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் மழை நீர் நிரம்பி மழை நீரின் பாரம் தாங்காமல் பல பெடல் படகுகள் நீருக்குள் மூழ்கியது. அதை தொடர்ந்து இன்று படகு இல்ல பணியாளர்கள் நீரில் மூழ்கிய படகுகளை ஏறியில் இருந்து கரைக்கு கொண்டு வந்து படகில் உள்ள நீரை வெளியேற்றினர். பின்னர் நீரில் மூழ்கிய படகுகளை எரியில் இருந்து வெளியே கொண்டு வந்து பராமரிப்பு பணியை செய்து வருகின்றனர்.