/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாயப்பட்டறை உரிமையாளரை மிரட்டியவர் கைது
/
சாயப்பட்டறை உரிமையாளரை மிரட்டியவர் கைது
ADDED : மே 02, 2024 11:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் டவுன், குமரன் தெருவை சேர்ந்தவர் சிவகுமார், 40. சாய தொழிற்சாலை நடத்துகிறார். அதன் கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதாக, தாதகாப்பட்டியை சேர்ந்த மணிமாறன், 43, என்பவர் தொடர்ந்து புகார் அனுப்பி வந்துள்ளார்.
கடந்த, 5ல் சாய தொழிற்சாலைக்கு தொந்தரவு தராமல் இருக்க, 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, மணிமாறன் மிரட்டல் விடுத்ததாக, சேலம் டவுன் போலீசில் சிவகுமார் புகார் அளித்தார். அதேபோல் சாய தொழிற்சாலையின் மற்றொரு உரிமையாளரான அர்த்தனாரி என்பவர், 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக, மணிமாறன் மீது புகார் அளித்தார். இரு புகார்கள் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், மணிமாறனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

