/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை ஆவடத்துார் மக்கள் சாலை மறியல்
/
ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை ஆவடத்துார் மக்கள் சாலை மறியல்
ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை ஆவடத்துார் மக்கள் சாலை மறியல்
ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை ஆவடத்துார் மக்கள் சாலை மறியல்
ADDED : மே 07, 2024 10:25 AM
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்துார் மக்களுக்கு, இருப்பாளி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் காவிரி குடிநீர் வழங்கப்பட்டுகிறது. இருப்பாளி கால்நடை மருத்துவமனை அருகே, எல்.பி.ஜி., காஸ் லைன் பதிக்க குழி தோண்டியபோது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவது, ஒரு மாதமாக தடைபட்டது. இதுகுறித்து நங்கவள்ளி ஒன்றிய அலுவலகம், ஆவடத்துார் ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் பலனில்லை.
இதனால், 50க்கும் மேற்பட்டோர், சீரான குடிநீர் கேட்டு, நேற்று காலை, 8:00 மணிக்கு ஜலகண்டாபுரம் -- இடைப்பாடி பிரதான சாலையில், ஏரிக்கரை பெருமாள் கோவில் பஸ் ஸ்டாப்பில், காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். ஜலகண்டாபுரம் போலீசார் பேச்சு நடத்தினர்.
தொடர்ந்து மேட்டூர் தாசில்தார் விஜி, ஆவடத்தூர் ஊராட்சி தலைவர் செல்வம், நங்கவள்ளி ஒன்றிய அதிகாரிகள், பேச்சு நடத்தி, ஒரு வாரத்தில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனால் மதியம், 12:30க்கு மறியல் முடிவுக்கு வந்தது. 4 மணி நேர மறியலால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால் சீரானது.