/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
/
மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
ADDED : ஆக 28, 2024 08:25 AM
சேலம்: தமிழக மணல் லாரி உரிமையாளர், அனைத்து கட்டுமான தொழில் சார்ந்த, 10 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, சேலம் ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் சேலம், கோட்டை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
இதுகுறித்து மாநில தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதனால் தமிழகம் முழுதும் உள்ள மணல் லாரி உரிமையாளர் உள்ளிட்ட கட்டுமான தொழில் சார்ந்த, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்தபடி, 26 மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும். இல்லை எனில், விரைவில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து சென்னை, ஜார்ஜ் கோட்டை முன், சாகும் வரை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செயலர் கண்ணையன், துணை செயலர் செல்வம், துணைத்தலைவர் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.