ADDED : ஆக 29, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஆக. 29-
காடையாம்பட்டி அருகே பொட்டியபுரத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலம், 48. இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். வெங்கடாஜலம், சேலம், பெரமனுார், நாராயணா பிள்ளை தெருவில் சாலையோரம் தள்ளுவண்டியில் சலவை கடை வைத்துள்ளார். அதற்கு எதிரே உள்ள வீட்டின் உரிமையாளர் அருண் ஜேக்கப், போக்குவரத்துக்கு இடையூறாக சலவை கடை இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். நேற்று அங்கு வந்த மாநகராட்சி பணியாளர்கள், கடையை அகற்றினர்.
இதுகுறித்து வெங்கடாஜலம் கூறுகையில், ''24 ஆண்டுகளாக கடை நடத்திய நிலையில், ஒருவர் எதிர்ப்பால் அகற்றிவிட்டனர். முன்னறிவிப்பு வழங்காமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.

