/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'புது கண்டுபிடிப்புகளை உருவாக்கக்கூடியபொறியாளருக்கு உலகம் காத்துக்கிடக்கிறது'

ADDED : மார் 10, 2025 01:30 AM
'புது கண்டுபிடிப்புகளை உருவாக்கக்கூடியபொறியாளருக்கு உலகம் காத்துக்கிடக்கிறது'
ஓமலுார்சேலம் அரசு பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் விஜயன் தலைமை வகித்தார். அதில், 2024ம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்த, அமைப்பியல், கணினி அறிவியல், மின்னணுவியல், மின்னியல், இயந்திரவியல் துறைகளை சேர்ந்த, 449 மாணவ, மாணவியருக்கு, விசாகப்பட்டினம் கடல்சார், கப்பல் கட்டுமான சிறப்பு மைய நிர்வாக செயல் அலுவலர் சேதுமாதவன், பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக அவர் பேசியதாவது: மனிதன் சிந்திக்கும் திறனை, எந்த இயந்திரமும், தொழில்நுட்பமும் மாற்றி அமைத்து விட முடியாது. அறம் சார்ந்த புது கண்டுபிடிப்புகளை உருவாக்கக்கூடிய பொறியாளர்களை எதிர்பார்த்து, உலகம் காத்துக்கிடக்கிறது.
அந்த தேவையை இளைஞர்கள் பூர்த்தி செய்து தர வேண்டும். தற்போதுள்ள, 80 சதவீத வேலையில், 5 ஆண்டுக்கு பின் நிறைய மாற்றங்கள் ஏற்படும். பொறியியல் மாணவர்களுக்கு நிதி மேலாண்மை பாடம் அவசியம். புது தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.கல்லுாரி துணை முதல்வர் கீதா, தேர்வாணையர் சுதா, துறைத்தலைவர்கள், பட்டம் பெறும் மாணவ, மாணவியரின் பெற்றோர் பங்கேற்றனர்.