/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீர்த்தக்குட ஊர்வலம் நாளை கும்பாபிேஷகம்
/
தீர்த்தக்குட ஊர்வலம் நாளை கும்பாபிேஷகம்
ADDED : ஆக 22, 2024 01:35 AM
தீர்த்தக்குட ஊர்வலம்
நாளை கும்பாபிேஷகம்
மகுடஞ்சாவடி, ஆக. 22-
சித்தர்கோவில் அருகே ஆரியகவுண்டம்பட்டி, சித்ரானுாரில் உள்ள முத்துமுனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த, 15ல் முகூர்த்தகால் நடுதல், கங்கானம் கட்டுதல் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு சித்தர்கோவிலுக்கு வந்த பக்தர்கள் புனித கிணறுகளில் நீராடினர்.
தொடர்ந்து குடங்களில் புனித தீர்த்தம் நிரப்பி பூமாலை சூடினர். சித்தர்கோவில் சிவாச்சாரியார், தீர்த்த குடங்களுக்கு பூஜை செய்தார். 9:30 மணிக்கு பசு, காளைகள், குதிரை முன்புறம் செல்ல, பக்தர்கள் ஊர்வலமாக நடந்து சென்று கோவிலை அடைந்தனர். நாளை காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் முத்து முனியப்பனுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.