/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டம் பெறாத மாணவர்களா? பெரியார் பல்கலை அழைப்பு
/
பட்டம் பெறாத மாணவர்களா? பெரியார் பல்கலை அழைப்பு
ADDED : ஆக 18, 2024 04:13 AM
ஓமலுார்: தேர்ச்சி பெற்று பட்டம் பெறாத மாணவர்கள், அதை பெறுவ-தற்கு விண்ணப்பிக்கலாம் என, பெரியார் பல்கலை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெக-நாதன் அறிக்கை:
பெரியார் பல்கலை பட்டமளிப்பு விழா செப்டம்பர், 3வது வாரம் நடக்க உள்ளது. அதில் பல்கலை வேந்தரான கவர்னர், முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள், முதல் தரவரிசையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இதுவரை தேர்ச்சி பெற்று பட்டம் பெறாதவர்கள், பட்டமளிப்புக்கு விண்-ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பல்கலைக்கு வந்து சேர வேண்-டிய இறுதிநாள் செப்., 13.
அதேநேரம் பல்கலை துறைகள், தர்மபுரி பெரியார் பல்கலை பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி மையம், பல்கலை இணைவு பெற்ற கல்லுாரிகள், பெரியார் பல்கலை இணையவழி, தொலை-நிலை கல்வி மையம் மூலம் பட்ட சான்றிதழ்களுக்கு ஏற்கனவே கட்டணம் செலுத்திய மாணவர்கள், தனியே விண்ணப்பிக்க தேவையில்லை.