தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வேன் - லாரி நேருக்கு நேர் மோதல் நடன கலைஞர் உள்பட 2 பேர் பலி

வேன் - லாரி நேருக்கு நேர் மோதல் நடன கலைஞர் உள்பட 2 பேர் பலி

வேன் - லாரி நேருக்கு நேர் மோதல் நடன கலைஞர் உள்பட 2 பேர் பலி


ADDED : ஜூலை 14, 2024 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2024 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரத்தை சேர்ந்தவர் சிவாஜி, 52. நடன கலைஞரான இவர், நடன குழு வைத்து நடத்தி வந்தார்.

அரியலுாரில் கலைநிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று ஆம்னி வேனில் நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

காலை, 6:00 மணிக்கு சேலம் மாவட்டம் ஆத்துார், வால்கரட்டில் வந்தபோது ஆத்துாரில் இருந்து வீரகனுார் நோக்கி சென்ற, 'ஈசர்' மினி லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் அப்பளம்போல் நொறுங்கி, மினி லாரியில் சிக்கிக்கொண்டது. இதில் சிவாஜி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

வேனை ஓட்டி வந்த, ராசிபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம் பார்த்-திபன், 35, வேனில் சிக்கிக்கொண்டதால், 'பொக்லைன்' மூலம் மீட்கப்பட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்-பட்டார். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.

ஆத்துார் டவுன் போலீசார் விசாரணையில், லாரியை விட்டு தப்பி ஓடியவர், ஆத்துார், முல்லைவாடியை சேர்ந்த ஜெய்கணேஷ் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராசிபுரத்தில், '108' அவசரகால ஆம்புலன்ஸ் டிரைவாக பார்த்-திபன் பணிபுரிந்ததும், சொந்தமாக ஆம்னி வேன் வைத்து விடு-முறை நாட்களில் வாடகைக்கு ஓட்டி வந்ததும் தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us