/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பறவை, விலங்கு மீது தண்ணீர் தெளிப்பு
/
பறவை, விலங்கு மீது தண்ணீர் தெளிப்பு
ADDED : ஏப் 08, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்;சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், பறவை, பாலுாட்டி, ஊர்வன, நீந்துவன இனங்களில், 200க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், வனத்துறை சார்பில், மயில், கொக்கு உள்ளிட்ட பறவைகள், மான் உள்ளிட்ட விலங்குகள் மீது காலை, மதியம் என, தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
சில விலங்கினங்களுக்கு தண்ணீர் தெளித்து கொண்டிருக்கும்படியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பறவைகளுக்கு தர்பூசணி, உடல் வெப்பத்தை குறைக்க பவுடர் வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கை வெயில் காலம் முடியும் வரை தொடரும் என, பூங்கா வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

