/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆவினில் இயந்திரத்தில் சிக்கி பெண் பலி ரூ.7 லட்சம் வழங்காமல் ஒப்பந்ததாரர் இழுத்தடிப்பு

ADDED : செப் 05, 2024 08:59 PM
சேலம்:சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பொம்மியம்பட்டியை சேர்ந்த, டிரைவர் கார்த்திகேயன், 38. இவரது மகன்கள் பிரகதீஸ்வரன், 10, யஷ்வந்த், 7, மகள் அனுஸ்ரீ, 4, ஆகியோருடன், கார்த்திகேயன், நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டுக்கு நேற்று வந்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மனைவி உமாராணி, 30. திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தார். கடந்த மாதம், 20ல் அவர் பணியில் ஈடுபட்டபோது, இயந்திரத்தில் சிக்கி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதனால் ஒப்பந்ததாரர் ஜெயசீலன், 11 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக கூறி, 4 லட்சம் வழங்கினார். மீதி, 7 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினார். அதன்மூலம் பணம் எடுக்க முடியவில்லை. ஒப்பந்ததாரரிடம் புது காசோலை கேட்டால் வழங்காமல் இழுத்தடிக்கிறார். மேலும் வழக்கை வாபஸ் பெற்றால்தான் பணம் தருவேன் என கூறிவிட்டார். அத்துடன் கொலை மிரட்டல் விடுக்கிறார். இழப்பீடு தொகை கிடைக்க செய்வதோடு, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கார்த்திகேயன், குடும்பத்தினருடன், பழனிசாமியை சந்தித்து மனு வழங்கினார்.